பக்கம்:கீதைப்பாட்டு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதைப் பாட்டு (மூன்றாம் அத்தியாயம்) கர்ம யோகம் ( இயற்பொருள் விளக்கம்) மூன்றெனியல் பாரொடு முயங்கியது காத்தற் கேன்று குனனில் வினைகளிற் றலைமை வைத்தே ஆன்ற கடவுள்ளுழை யருப்பனஞ்செய் தெல்லாச் சான்ற வினையும் புரிதலைப் புகல்வ தாகும். கர்ம யோக ஞான யோகங்களுள் ஞானயோகமே கடுகப் பலனை யளிக்குமென்றாலும் கர்ம யோகமே செய்யத் தக்கது. ஆக்கையிருக்கும் வரையில் மனிதனுக்கு ஏதாவதொரு தொழிலைச் செய்வதே இயற்கையாயிருக்கும். அவன் துணிந்து வேறு துறைகளிலிழிந்த போதிலும் புலன்கள் அவனை இழுத்துச் செய்கையிலேயே கொண்டு வந்து நிறுத்தும். இந்திரியங்களை அடக்கி ஞான நிலையில் நிற்கும் திறமை வாய்ந்தவனும் கர்மங்களையே செய்யக் கடவன். ஏனெனில், இவனது உண்மை நிலையறியாத பாமரர்களும் இவனைக் கண்டு தாங்களும் கர்மங்களை விட்டு ஞானத்துறையில் துணிவுறுவார்கள். அதனால் அவர்கள் கர்மயோகத்தை யிழந்ததுமன்றி ஞானயோகத்தையுமிழந்து முன்னிலும் தாழ்ந்த நிலைமைக்கு வந்துவிடுவார்கள். அவர்கள் கெடுவதற்கு இவனே காரணமாவான். ஆகையால் ஞானயோகத்தில் திறமையுள்ளவனுக்கும் திறமையில் லாதவனுக்கும் கர்ம யோகமே மேலானது. கர்மங்களைச் செய்யும்போது, 'இந்நிலைமை எனக்கு பிரகிருதி சம்பந்தத்தால் வந்தேறியதென்றும் ஈசுவரனுடைய கட்டளையினால் அவனுதவியைக் கொண்டு அவனுடைய பிரிதிக்காகவே செய்கிறோம்,' என்றும் எண்ணிச் செய்ய வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/79&oldid=799959" இலிருந்து மீள்விக்கப்பட்டது