பக்கம்:கீதைப்பாட்டு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதைப் பாட்டு (நான்காம் அத்தியாயம்) ஞான யோகம் (கதை இயற்பொருள் ఎూrఉ5) நான்கெ னியலிற்பி ருதை நன்மகன் வினாவத் தான்செய் யவதார முரைதந் துநிதந் செய்தற் கேன்ற வினையின்கண் வினையின் மையும் வினைக்கண் ஆன்ற வகையும் மதிலடங் கறிவுந் சொல்வான். 'அர்ஜுனா, உன்னை ஏமாற்றிச் சண்டையில் உற்சாகமூட்டுவதற்காக உன்னைக் கர்ம யோகத்தில் துாண்டுகிறேன் என்று எண்ணாதே. உலகத்தைப் படைக்கும் போதே இக் கர்ம யோகத்தை நான் மனுவுக்கு உபதேசித்தேன். பிறகு மனுவின் வழியாக உலகில் அது பரவிற்று' என்று சொல்லிக் கண்ணன் தமது அவதார ரகசியத்தைக் கூறுகிறார். பிறகு கர்ம யோகத்தின் பிரிவுகளையும் அவற்றுள் அடங்கிய ஆத்ம ஞானத்தின் பெருமையையும் விளக்குகிறார். கர்ம யோகம் ஞான பாகத்தை உள்ளடக்கிக் கொண்டிருப்பதால் அதுவே ஞான யோகத்தின் பலனையும் அளிக்கும் என்று கூறுகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/93&oldid=799975" இலிருந்து மீள்விக்கப்பட்டது