பக்கம்:கீதைப்பாட்டு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான யோகம் 95 பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம-லம்ஸ்த்தாபனார்த்தாய லம்ப்பவாமி யுகே யுகே 8. சாதுக்க ளைப்பரி பாலிக்க வுங்கெடு தற்றொழி லாரைச் செற்றிட வுந்தான் மேதக்க தாக வறத்தை நிறுத்தவு மேவுவ லுற்பவ மூழியொ டுழி. 17 U. நல்லோரைக் காக்கவும். தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலைநிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன். ஜன்ம கர்ம ச மே திவ்ய-மேவம் யோ வேத்தி தத்வத: த்யக்த்வா தேஹம் புனர்-ஜன்ம நைதி மாமேதி லோsர்ஜூன 9. என்றிப்பிய சென்மமும் வினையு மிவ்வா றெவனுள் ளபடிக் குணர்வன் னவன்மெய் பொன்றித் திருமச்செனனம் புகுதான் புகுவானெ னையம்ம வருச்சுனனே. 177 எனது தெய்வத்தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ங்ன மென்பதை உள்ளபடி யுணர்வோன் உடலைத் துறந்த பின்னர் மறு பிறப்பு எய்துவதில்லை. அர்ஜூனா அவன் என்னை எய்துகிறான். வித-ராக-பய-க்ரோதா மன்மயா மாமுபாச்ரிதா: பஹவோ ஜ்ஞான-தபலர பூதா மத்பாவ-மாகதா: 10. ஞான தவத்தினி லாகிய சுத்தியின் ராகப யத்தொடு கோபம் விடுத்தொரு வேனைய டுத்தெனை யேநினை வாயவர் எத்துணை யோரென் னியற்கையை யெய்தினர். 172 விருப்பத்தையும், அச்சத்தையும். சினத்தையும் துறந்தோராய், என் மயமாய் என்னை அடைக்கலம் புகுந்து ஞானத்தவத்தால் தூய்மைபெற்று என்னியல்பு எய்தினோர் பலர். யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்-ததைவ பஜாம்யஹம் மம வர்த்மானுவர்த்தந்தே மனுஷ்யா பார்த்த ஸர்வச: 1 யாரெப் படியென் னைநினைத் தடைவார் யான்ப் படியே யவருக் கெதிர்வேன் ஆர்வப் பிருதைக் கொருசேய் நரரெல் லாவற் றினுமென் வழியிற் றொடர்வார் 17.3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/96&oldid=799978" இலிருந்து மீள்விக்கப்பட்டது