பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுட் கொள்கை 1 15 இங்கேயும் கிருஷ்ணன் அந்தத் தேவதைகளின் மூலம் தானே தொழப்படுவதாகக் கூறுகிறான். அடுத்து வரும் ஒரு சுலோகத்தில் கிருஷ்ணன் கூறும் கருத்து, எல்லாம் தன்னையே அடைகின்றன என்ற கருத்துக்கு மாறுபட்டதாய் உள்ளது. தேவ விரதிகள் தேவரை எய்துவர் பிதிர்க்களை நோற்போர் பிதிர்க்களை யடைவார் பூதங்களைத் தொழுவோர் பூதங்களை யடைவார் என்னை வேட்போர் என்னையே அடைவார் - கீதை 9 : 25 இந்த சுலோகத்தில் எல்லாரும் தன்னை அடை வார் என்று கிருஷ்ணன் சொல்லவில்லை. யாராரை வணங்குகிறார்களோ அவரவர்களை அடைவார்கள் என்று மட்டுமே கூறுகிறான். இது ஒன்றுக் கொன்று முரண்பட்டுள்ளது. இன்னொரு மோசமான கருத்தையும் சொல் கிறான். நடத்தையை விட வழிபடுவதையே அவன் வற்புறுத்துகிறான். பக்திதான் முக்கியமே தவிர பண்பு தேவையில்லை என்கிறது இந்த சுலோகம். மிகவும் கொடிய நடையோனாயினும் பிறிது வழிபடாதே என்னை வழிபடுவோன் நல்லோனென்றே கருதுக. ஏனெனில் நன்கு முயல்கின்றான் ஆகலின். - -கீதை 9 : 30