பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 16 கீதை காட்டும் பாதை தான் நடு நிலையில் உள்ள கடவுள் என்று எடுத்துக் காட்ட கீழ்வரும் சுலோகங்களில் நல்ல கருத்துக்களைக் கூறுகிறான். நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன். எனக்குப் பகைவனும் இல்லை. நண்பனுமில்லை. என்னை அன்புடன் தொழுவோர் அகத்தில் நான் இருக்கிறேன், என் அகத்தில் அவர் உள்ளார். - - கீதை 9 : 29 பாவிகளென்னைப் பணிவாராயினும், மாதரேனும்: வைசியரேனும், சூத்திரரும் பரகதி பெறுவாரி. -கீதை 9 : 35 இவ்வளவு உயர்ந்த நினைப்பில் பேசுபவன் பிறிதோர் இடத்தில் நஞ்சைக் கக்குகிறான். தீமை செய்யும் மூடர், மனிதரில் கடைப் பட்டார். மாயையால் ஞான மழிந்தோர், அசுரத் தன்மையைப் பற்றி நிற்போர்-இனையோர் என்னைச் சரண் புகார். -கீதை 7 : 1.5 சூத்திரர்கள், கடைப் பட்டோர், பாவிகள், மூடர் என்று ஒதுக்கி மனித இனத்திலே வேற்றுமை வளர்க்கும் கருத்துக்களைக் கொள்பவன் எல்லோ ருக்கும் அப்பனாய் அம்மையாய் எப்படி இருப்பான். உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் தாயும் தந்தையுமாய் நானே இருக்கிறேன் என்று தன்னை உயர்த்திக் கூறுபவன், உயிர்க்கொலை வேள்வியைச் செய்வது மனிதரின் கடமை என்று இடைவிடாமல் வற்புறுத்திப் பேசுகிறான்.