பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதை காட்டும் பாதை 125 முழுமுதற் கடவுளாக இருந்த பிரமன் பின்னுக்குத் தள்ளப்பட்டு பின்னால் கடவுளாக எண்ணப்படாத நிலைக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறான். புராணங்களும், முழுமுதற் கடவுளாக விளங்கிய பிரமனை விஷ்ணுவின் தொப்பூழ் கொடியில் பிறந்தவனாக - விஷ்ணுவின் மகனாகச் சித்திரித்து, அவனுடைய முக்கியத்துவத்தையும் சிறப்பை யும் குறைத்துவிட்டன. சைவர்களின் புராணக்கதையில், விஷ்ணுவும் பிரமனும் தமக்குள் யார் பெரியவர் என்று போட்டி போட்டுத் தர்க்கம் செய்து கொண்டதாகவும், சிவபெருமானிடம் நியாயம் கேட்கப் போன தாகவும், சிவபெருமான் - எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளான சிவபெருமான் - வானத்துக்கும் பாதாளத் துக்குமாக ஒரு பேருருவம் எடுத்ததாகவும், தன் அடியை ஒருவரும் முடியை ஒருவரும் யார் முதலில் தேடிக் கண்டு பிடிக்கிறார்களோ அவர்களே பெரியவர்கள் என்று போட்டி வைத்த் தாகவும், அந்தப் போட்டியில் விஷ்ணு பன்றியாக மாறி அடியைக் கண்டுபிடிக்க நிலத்தைத் தோண்டிக் கொண்டு சென்றதாகவும்,