பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கீதை காட்டும் பாதை கடவுளுக்குப் பிறப்பில்லை என்ற கருத்துடைய நாம், கண்ணனை மற்ற தேவர்களைப் போல் ஒரு தேவனாக மட்டுமே இங்கு மதிப்பிடுகிறோம். அடுத்தடுத்து வரும் கீதைகளில், யோகியா யிருப்பவன் அல்லது பக்தனாக இருப்பவன் பிரமத்தை அடைகிறான் என்று கண்ணன் கூறும் போது, நாம் பிரம்மமாகிய கடவுள் வேறு, கண்ணன் வேறு என்றே கருதுகிறோம். பிரமஸ்திதி, பிரம நிர்வாணம் என்றெல்லாம் கண்ணன் குறிப்பிடும்போது பிரமமாகிய முழுமுதல் தனிப்பெரும் கடவுளைக் கண்ணன் குறிப்பிடுகிறான் என்றே எண்ணுகிறோம். மோட்சம் பிரமஸ்திதி என்றெல்லாம் குறிப்பிடு கின்றபோது அக்காலத்தில் இருந்த நம்பிக்கை களின்படி சாவுக்குப்பின் மக்கள் சென்றடையும் நிலைகளையே கண்ணன் கூறுகிறான் என்ற எண்ணமே தோன்றுகிறது. கீதை எழுதப்பட்ட காலத்தில் பிரமனே முழு முதற் கடவுளாகக் கருதி வழிபடப் பட்டிருக்கிறான். பிரமம், பிரமஸ்திதி, பிரமயோகம் என்றெல்லாம் கடவுள் நிலை பேசப்பட்டு வந்திருக்கிறது. பிரமனுக்குள்ள இந்தத் தகுதியைக் கண்ணன் தனக்காக்கிக் கொள்வதைக் கீதையில் காண் கிறோம்.