பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 கீதை காட்டும் பாதை இந்தப் பாரத பூமி ஞான பூமி என்று பெருமைப் பட்டுக் கொள்வதும், மக்களை விலங்குகளினும் கேவலமாக நடத்தச் சொல்லும் சாத்திரங்கள் இந்தப் பாரத நாட்டின் சொத்துக்கள் என்றும், இந்த சாத்திரங்களும் சம்பிரதாயங்களும், அழியாமல் காப்பாற்றப்படவேண்டும் என்றும், இந்தச் சாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட மதத்தையும், இந்த மதத்தின் அதிபதிகளான கடவுள்களையும் காப்பாற்ற முற்படுகின்ற எந்த ஞானியும், சன்னியாசியும், பீடாதிபதியும் ஆச்சாரியாரும், சங்கங்களும், கட்சிகளும் போற்றப் பட வேண்டியவர்களா? பிரமனே படைத்ததாக இருந்தாலும் கண்ணனே வகுத்ததாக இருந்தாலும், இந்த வருணாசிரம தர்மம் எனப்படும் கொடுமையானது கைவிடப்பட வேண்டியது என்று கூறக்கூடிய உறுதி படைத்த பெரியவர்கள் யாராவது இந்து மதத் தலைவர்களிலே இருக்கிறார்களா? கீதையைப் பிரசாரம் செய்வதே தங்கள் வாழ் நாளின் தொண்டாகச் செய்து வரும் சாதுக்கள் சன்னியாசிகள் ஞானிகள் யாராவது இந்தக் கொடிய வருணாசிரம தரும ஏற்பாடு தவறானது என்று துணிந்து கூறியதுண்டா?