பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் விரித்த வலை 14? மாந்தர்குல மேம்பாட்டுக்கு முரணான இத்தகைய கருத்துக்களைக் காலப் போக்கில் ஒதுக்கித் தள்ளுவது தான் அறிவுடைமை யாகுமே யன்றி இவற்றைத் தூக்கிப் பிடித்து நிறுத்துவதும் நிலைநிறுத்த முற்படுவதும் தவறு என்று உணரா விட்டால், கற்ற கல்வியின் பயன் என்ன? பேசும் தருமத்தின் பொருள் என்ன? கண்ணனாயினும் அவன் அண்ணனாயினும், இந்த மண்ணின் மைந்தர்களைக் கேவலப்படுத்தும் வருணாசிரம ஏற்பாட்டைக் கொண்டு வந்தவன் பழிக்கத் தக்கவனேயாவான். சாங்கிய யோகம், ஞான யோகம், கர்ம யோகம் சந்நியாச யோகம், அத்யாத்ம யோகம், அட்சர பிரம்ம யோகம், ராஜ வித்யா ராஜ ரகஸ்ய யோகம், விபூதி யோகம், பக்தி யோகம் என்றெல்லாம், யோகம் யோகம் என்று பெரிய தலைப்புகளிலே பேசப்படுகின்ற ரகஸ்யத்திலும் ரகஸ்யாமான ஞானம் முழுவதும், இந்நாட்டுப் பெருங்குடி மக்களை சூத்திரர்கள் என்று பெயரிட்டு அடக்கி அடிமைப் படுத்தி அதள பாதாளத்தில் தள்ளி வைக்கச் செய்யப்பட்ட ஏற்பாடுதான் என்பதை உணருகின்ற போது, இந்தக் கொடுமையை ஏற்படுத்தியவன் எவ்வளவு பெரிய பாவியாக இருக்கவேண்டும் என்று தான் எண்ணத் தோன்றுகிறது. சமுதாய விரோதமான இந்தக் கருத்தை வெளிப்படுத்துவதற்கே அர்ச்சுனன் கருவியாகப் பயன்பட்டிருக்கின்றான்.