பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கீதை காட்டும் பாதை மூன்றாமவன் விதுரன், அரண்மனைத் தாதி மகன் என்பதால் ஒதுக்கப் படுகிறான். நோயாளியான பாண்டுவே பட்டத்துக்குத் தகுதி யுடையவனாக ஏற்கப் படுகிறான். அவன் மனைவி குந்தி - நோயாளியான கணவன் தன்னைக் கூடினால் இறந்து விடுவான் என்று தெரிந்து - அவளும் இன்னொரு மனைவி மாத்திரியும் அவன் அனுமதியுடன் வேறு சிலரைக் கூடி ஐந்து புதல்வர்களைப் பெறுகிறார்கள். அந்த வேறு சிலர் தேவர்களாம்! இதைப் பாரதீய சாத்திரம் சம்பிரதாயம் ஒப்புக் கொள்கிறது. பெண்ணுடன் கூடினால் இறப்பு வரும் என்று தெரிந்திருந்தும் பாண்டு அரண்மனைத் தாதி ஒருத்தி யுடன் கூடி இறந்து போகிறான். பாண்டு இறந்து போனபின் பாண்டுவின் மக்கள் அவர்களில் மூத்தவன் தருமன் (யுதிஷ்டிரன்) பட்டம் ஏற்கிறான். அப்போது துரியோதனன் - திருதராட்டிரனின் மகன் ஆளும் உரிமை தனதே என்று வாதிடுகிறான். குருடாக இல்லாதிருந்தால், தன் தந்தை திருதராட்டிரன் தான் ஆட்சிக்கு வந்திருப்பார் என்றும், அவருக்குப் பிறகு முறைப்படி ஆட்சி