பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் போரின் அடிப்படை 19 தன்னைச் சேர வேண்டிய தென்றும் அவன் முறை யிடுகிறான். தன் தந்தைக்குப் பதிலாகவே பாண்டு ஆட்சி செய்தான் என்றும், தான் ஆட்சிப் பொறுப்பிற்கு வரக் கூடிய தகுதி வந்து விட்டதாலும், தான் குருடு இல்லை என்பதாலும், பாண்டு இறந்தபின் முறை யாகத் தான்தான் அரசாள உரியவன் என்றும் அவன் செய்த வாதங்கள், அன்றைய அரசியல் மேதைகளா லும் குலப் பெரியவர்களாலும் ஏற்றுக் கொள்ளப் பெறவில்லை. சாத்திரங்களும், சட்டங்களும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கே வளைந்து கொடுக்கும். அதி காரத்தை இழந்தவர்களுக்கு அது எட்டுவதில்லை. தருமனுக்கே பட்டம் சூட்டப் படுகிறது. அவன் ஆட்சி செய்யத் தொடங்குகிறான். துரியோதனன் போர் செய்தேனும் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கிறான். சாத்திரம் என்ற பெயரால் தனக்குரிய அரசாட்சி கை நழுவிப் போனதை அவனால் பொறுக்க முடியவில்லை. அவன் மாமன் சகுனி அவனுக்குச் சூழ்ச்சி வழி ஒன்று காட்டுகிறான்.