உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குக்கூ.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பின்னால் இருந்த
என் மடிச்சந்தில்
வந்து விழுந்தது.....
மாற்றான் தோட்டத்து மல்லிகை ஓடும் பேருந்தில்!

போன்ற ரச பேதங்களிலும்

இதுதான் வேலை
மல்லாந்து படுத்து
சிகரெட் புகையை
ஊதி ஊதித்தள்ளும்
எங்கள் ஊருககு வந்த
புதிய சிமெண்ட் ஆலை.

போன்ற நறுக்குகளிலும் மீராவின் தனிப் பார்வை புலப்படுகிறது. ○ குக்கூ எனக் கூவும் இந்தக் கவிதைகள் மீராவின் மெளனத்தை மட்டும் கலைக்கவில்லை. தமிழ்க் கவிதை உலகில் நிலவும் பேச்சற்ற பிடிவாத மெளனத்தையும் கலைக்கும் என எதிர்பார்க்கலாம்.

பாலா 28-01-02 தங்கல்: தஞ்சை

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/16&oldid=1233640" இலிருந்து மீள்விக்கப்பட்டது