பக்கம்:குக்கூ.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

வசந்தம் வந்தது;
பூமி வேசி
புதுமஞ்சள் பூசி
சதிராடிச் சிரிப்பாள்
சரக்கொன்றை மரத்துக்கடியில்.


38

நாளெல்லாம்
டீசல் சாராய
நாற்றம் உமிழும்
நகரத்துப் பேருந்தில்
காலையில் மட்டும்
கறிவேப்பிலை
மணங்கமழும்
கறிகாய்க்காரக்
கண்ணம்மாவால்

மீரா 42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/42&oldid=1233063" இருந்து மீள்விக்கப்பட்டது