உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குக்கூ.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

மழை பெய்கிறது
கையில் ஒரு குடை...
கண்ணே வா;
இருவரும் இணைந்து
சுகம் காணலாம் நனைந்து.


86

என்றோ ஒருநாள்
இந்துமாக் கடலில்
மூழ்கிக் கிடந்ததாம் இமயம்;
இன்றோ
உன் நினைவின் ஆழத்தில்
மூழ்கிக் கிடக்கும்
கவிதைகளாலே கனத்த என் இதயம்.

மீரா 65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/66&oldid=1233054" இலிருந்து மீள்விக்கப்பட்டது