உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குக்கூ.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109

அகத்தைக் கேட்டேன்
கண்ணாடி வேண்டுமா
பார்த்துக் கொள்ள,
அகம் சொன்னது
'அகம்பாவம் இல்லை
பார்த்துச் சொல்ல."

110

நேற்று உண்ணும் அரிசி நொறுங்கல்
இன்று உண்ணும் அரிசியில் சிறுங்கல்
நாளை உண்ணக் கிடைப்பதோ வெறுங்கல்.

மீரா 77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/78&oldid=1233091" இலிருந்து மீள்விக்கப்பட்டது