பக்கம்:குக்கூ.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்பவை ஒரு களம் இரு முனைகள் என்று அவரது போராட்டம். நாளடைவில் மதுரை எல்லை மாநிலம் என்று விரிந்தது. பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பிற்காக இதழொன்றும் நடத்தினார் மீரா. இடம் வலம் எனப் பேதமுறாது, போராட்டக் களங்களில் தானாகப் பங்கேற்று முன் நிற்பவர் மீரா.


பொது நலனுக்காக எழுதுதலும் அதற்கான ஜனநாயக ரீதியானப் போராட்டங்களும், மீராவின் மாணவப் பருவத்திலேயே அவர் மனத்தில் படிந்தவையாம். அந்த நாளில் திராவிட இயக்கம் சார்ந்த ஒவ்வொரு தமிழர் நலச் செயல்பாட்டிலும் அவர் கலந்திருந்தார். பின்னர் பொது உடைமை இயக்கங்களின் மக்கள் உரிமைப் போராட்டங்களிலும் முன் நின்றார். ஒன்றல்ல, இப்படி ஒரு நூறு பட்டியலிடலாம். மீரா ஒர் ஊமை அறிவு ஜீவி அல்ல. உரிமைக்காக உரத்த குரல் கொடுக்கும் அறிவுப் போராளி.


மீ.இராசேந்திரன் (1938) எனும் மீரா கவிஞராய் ஆளானது மொழிப்போர் நடந்தபோது. மீரா அன்னம்/ அகரம் பதிப்பகங்கள் தொடக்கியது அவசர நிலைக்கு அண்மைக்காலத்தில். இத்தகைய பதிவுகள் மீராவைத் தமிழ் மொழியோடும் தமிழர் வரலாற்றோடும் இணைத்து நிறுத்தி கவுரவப்படுத்தும்.


அந்நியர், புதியவர், தோழர், இளைஞர், மூத்தோர் வேற்று அணி தத்துவம் சார்ந்தவர் எனப் பலரது படைப்புகளையும் எழுத்தெழுத்தாய் படித்து அவை உயிரென்றால் அவற்றுக்கு உடல் உருக்கொடுத்து தமிழ் கூறும் உலகெங்கும் உலவ விட்டவர் மீரா, மீராவின் கவிதை, கட்டுரை, மற்றும் எழுத்துக்கள் அடங்கிய ஒட்டு மொத்தத் தொகுதி ஒரு கனவு. எங்கள் மீராவைப் போல் இன்னொரு மீரா கிடைப்பாரா அதற்கு?

நன்றி:தாமரை

'ஏப்ரல் 2002'

85
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/86&oldid=1233988" இலிருந்து மீள்விக்கப்பட்டது