பக்கம்:குஞ்சாலாடு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-குஞ்சாலாடு குமாரி கனகாம்பரம் ஜட்காவாலாவின் ரோஜாப்பூ வாக மாறியதுடன் அவளது வாழ்வின் மறுமலர்ச்சி நின்றுவிடவில்லை. அவளே காலம் குஞ்சாலாடு என்றுவேறு மலர்ச்சி பெறச் செய்தது ! கனகாவின் வாழ்க்கையைச் சோகமயமாக்கிய காலச் குறை அதை அடியோடு சீர்குலேக்கக் கங்கணம் கட்டி விட்டது போல் காரியங்கள் நிகழ்ந்தன, கனகாம்பரம் அட கடவுளே என்று அலுத்துக்கொண்டு மூலையில் கிடந்து அழ. விரும்பிலுைம், காலமோ கடவுளோ அவ ளுக்குத் துணேபுரியவில்லை ! ஜட்காவாலா கணபதியப்பனின் ரோஜாப்பூ வாக மூன்று தினங்கள் அவள் வாழ்வின் கொடுமைகளை அனுப வித்தாள். அவற்றை விடக் கொடிய வருங்காலம் அவளுக் குத் காத்திருத்தது. அதை அவள் ஆரம்பத்தில் உன்ர வில்லை. இருள் கிறைந்த அந்த வாழ்வுப் பாதையில் அவ ளேத் தறிகெட்டுத் திரியும்படி வழிகாட்ட வந்து சேர்ந்த துரதுவகைத் தோன்றின்ை காத்தலிங்கம். குமாரி மாணவனின் காதலி என்ற கிலே போய் கறை பட்ட மலராகி மூன்று நாட்கள் ஒடிய பிறகு, நான்காவது நாள் காலேயில் வந்துமுளேத்தான் காத்தலிங்கம், அவளைக் காக்க வந்த கடவுளின் அவதாரம் போல, - - அப்பொழுது காலே மணி ஒன்பது ஒன்பதரை மணி ரயில் வண்டியை பார்த்துவிட்டு வர போயிருந்தான் ஜட் காவாலா. சில தினங்களாகி விட்டதினுல் அவன் கதவுக ளேப் பூட்டுவதில்லை. மேலும் அவள் தப்பி ஓட முயன்ரு லும் தன் திருஷ்டியை விட்டு கழுவ முடியாது என்ற துணிவுடன், அப்படி அவள் ஓடத் துணியமாட்டாள் எனும் நம்பிக்கையும் அவனுக்குப் பிறந்திருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/59&oldid=800331" இலிருந்து மீள்விக்கப்பட்டது