பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15



letter to the speaker was communicated to the House before the motion for his expulsion was moved,

“The law, privileges, proceedings and usage of parliament.”

by Ermskine May P. 133

பாராளுமன்ற உறுப்பினராகும் தகுதியை இழந்து விட்டவர் எனக் கருதப்பட்டவர்களுக்கும், அவர்களைப் பதவி இழக்கப் பண்ணும் தீர்மானம் அவையில் நிறைவேறுவதற்கு முன்னர், அவர்கள் அவைக்கு வரவும், வந்து தம்பதவி இழப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டக் கூடாது என்பதற்கான காரண காரியங்களைக் கூறி வாதிடவும் வாய்ப்பளிக்கும், இங்கிலாந்து நாட்டுப் பாராளுமன்றத்து உயர்ந்த மரபுதான் என்னே!

ஆனால் இங்கோ, சட்டமன்ற உறுப்பினராக முழுத் தகுதியோடிருப்பவர்களுக்குச் சட்டமன்றம் நடைபெறுவதற்கான அழைப்பாணை கூட அனுப்பாமல், அவர்களின் பதவி இழப்புத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. என்னே நம் பாராளுமன்ற மரபு!

தண்டனை பெற்ற கைதியாகச் சிறையில் இருக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினர்க்கு, சட்டப் பேரவைச் செயலகத்தோடும், பேரவைத் தலைவரோடும், கடிதத் தொடர்பு கொள்ள உரிமை உண்டா என்ற கேள்வி எழுந்தபோது, சென்னை உயர்நீதிமன்றம் பின்வரும் தீர்ப்பினை வழங்கியிருப்பதையும் திருவாளர் கவுல் அவர்கள், தம்முடைய நூலில் எடுத்துக் காட்டியுள்ளார்.

தண்டனை பெற்ற ஒரு கைதி, தொடர்ந்து மன்ற உறுப்பினராக இருந்து, அதற்கான சம்பளமும்