பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22



குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாமா என்ற கேள்விகள் முறையானவையே.

ஆனால், பாராளுமன்ற, சட்டமன்ற நடவடிக்கை குறித்து விசாரிக்கும் உரிமை நீதிமன்றத்திற்கு இல்லை எனக்கூறும் நம் அரசியல் சட்டத்திலேயே, பாராளுமன்ற, சட்டமன்ற முறைகேடுகள் சில குறித்து நீதிமன்றம் விசாரிக்கலாம் என்பதற்கும், அவ்வகையில் விசாரிக்கப்பட்டுள்ளன என்பதற்கும், ஏராளமான முன்மாதிரிகளும் உள்ளன. அவற்றை விளக்குவதே இக்கட்டுரை.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பேச்சுரிமை அரசியல் சட்டம் 105 (1) பிரிவிலும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பேச்சுரிமை அரசியல் சட்டம் 194 (1) பிரிவிலும் வழங்கப்பட்டிருப்பது போலவே இந்தியக் குடிமகன் ஒவ்வொருவனுக்குமான பேச்சுரிமை, அரசியல் சட்டம் 19 (எ) பிரிவில் வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட பேச்சு, நிகழ்ந்த செயல்பாடு குறித்து எந்த நீதிமன்றமும் விதிக்கக்கூடாது. என அரசியல் சட்டம் 105 (2) பிரிவும், அதேபோல் சட்டமன்றத்தில் பேசப்பட்ட பேச்சு, நிகழ்ந்த செயல்பாடு குறித்து எந்த நீதிமன்றமும் விவாதிக்கக்கூடாது என அரசியல் சட்டம் 194 (2) பிரிவும் தடை விதித்து இருக்கின்றன. -

ஆனால் அரசியல் சட்டம் 19 (எ) பிரிவின் கீழ் இந்தியக் குடிமகன் ஒருவனுக்கு வழங்கப்பட்டஉரிமையை நிலைநாட்டிக் கொள்ள உச்சநீதிமன்றம் செல்ல, குடிமகனுக்கு அரசியல் சட்டம் 32 பிரிவு உரிமை வழங்கியுள்ளது. .

Right to constitutional Remedies. 32. Remedies: for enforcement of rights conferred by this part (1) The right the move the supreme court by appropriate pro