பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

3. குடிமகனின் அடிப்படை உரிமையா?

சட்டமன்ற உரிமையா? 

முதலிடம் எதற்கு? சுப்ரீம் கோர்ட் தந்த தீர்ப்பு.

ஒர் உறுப்பினர்க்கு அழைப்பு ஆணை அனுப்பாமல் சட்டசபைக் கூட்டம் தொடங்கப்படுதல் கூடாது. அவ்வாறு நடைபெறும் சட்டசபைக் கூட்டம் செல்லாது. அக்கூட்டத்தில் நடைபெற்ற செயல் எதுவும் செல்லாது என்பதைப் பாராளுமன்ற சட்டமன்ற நடைமுறைகள் குறித்து வழங்கப்பட்ட பல்வேறு தீர்ப்புச் சான்றுகள் உறுதி செய்கின்றன என்பது உண்மை.

ஆனால், அக்காரணம் காட்டி, 10 உறுப்பினர்களின் பதவி இழப்புத் தீர்மானம் நிறைவேற்றிய சட்டசபைக் கூட்டம் செல்லாது என நீதிமன்றம் செல்ல முடியுமா? அரசியல் சட்டம் 105(2); 194(2) பிரிவுகள், நாடாளுமன்ற சட்டமன்ற செயல்பாடு குறித்து, யாரும், எந்த வழக்கு மன்றத்திலும் முறையீடு செய்யக் கூடாது என்றும், அரசியல் சட்டம் 122வது மற்றும் 212வது பிரிவுகள் பாராளு மன்றத்து எந்தச் செயல்பாடு குறித்து :கிழக்கு எதையும் எந்த நீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் தெளிவாகக் கூறியிருக்கும் போது இது