பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

நேர்ந்துவிட்ட தவறினைத் திருத்த இயலும்" என்று தான் கூறியுள்ளார்.

"Now that point still remains, and has not been adequately settled and that can only be corrected, by a parliamentary statute, that is to say by oppropriately amending the relevent section and putting it beyond doubt, that the courts have no power to grant bail in contempt cases."

Parliamentary Institutions and proceedurs. by M. N. Kaul page 217.

திரு. கவுல் அவர்களும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் விளைவைத் தவிர்க்க, அரசியல் சட்டத்தின் சில பிரிவுகளுக்குத் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று தான் கூறியுள்ளாரே ஒழிய, அடிப்படை பாதிக்கும் போது பாதிக்கப்பட்டவர் பாராளுமன்ற சட்டமன்றங்களை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம் என்ற உச்ச நீதி மன்றத் தீர்ப்பு தவறானது எனச் சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பாராளுமன்றச் சபாநாயகர் பல்வேறு மாநிலங்களின் பேரவை மேலவைத் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துச் சபாநாயகர்களும் கூடி, தீர ஆராய்ந்து பாராளுமன்ற, சட்ட மன்ற உரிமைகள் பறிக்கப்படாத வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என 1965லேயே முடிவு செய்தனர் என்றாலும், அரசியல் சட்டம் அவ்வகையில் திருத்தப்படவில்லை.

பாராளுமன்ற, சட்டமன்ற நிகழ்ச்சிகளில் நீதி மன்றங்கள் தலையிடக் கூடாது என்ற உணர்வு பேரவைத் தலைவர்களிடையே இவ்வளவு ஆழமாகப் பதிந்திருக்கும் நிலையிலும், 1969-இல் மற்றுமொரு நிகழ்ச்சி நிகழ்ந்து விட்டது.