பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

35

ஆனால் அடிப்படை உரிமைகளில் கைவைக்கும் அதி காரம் பாராளுமன்றத்திற்கு இல்லை. கைவைத்தால், பாதிக்கப்பட்டவர், பாராளுமன்றத்தை எதிர்த்து, உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கலாம் என்ற உச்ச நீதி மன்றத் தீர்ப்பு குறித்து மறுத்து ஒரு சொல்லும் சொல்ல வில்லை.

அடிப்படை உரிமைக்கும், பாராளுமன்ற உரிமைக்கும் மோதல் வரும்போது, அடிப்படை உரிமைக்கே முதல் இடம். அடிப்படை உரிமை பாதிக்கப்படும்போது, பாதிக்கப்பட்டது, பாராளுமன்ற சட்டமன்ற உரிமை களால் என்றாலும், அம்மன்றங்களையும் எதிர்த்து, அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டவர் நீதி மன்றங்கள் செல்லலாம் என்ற உரிமை 1971-வரை மறுக்கப்பட வில்லை, -

1971-ல் பொதுத் தேர்தல் வந்தது. அரசியல் சட்டத் தையும் திருத்துவதற்கு தேவைப்படும் பெரும்பான்மை யோடு காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன் பயனாய் தன் அரசியல் குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ள பல்வேறு திருத்தங்களை அரசியல் சட்டத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிற்று; அவ்வாறு திருத்தப்பட்ட திருத் தங்களில் ஒன்றான 24-வது திருத்தம், அடிப்படை உரிமை உட்பட அரசியல் சட்டத்தின் எந்தப் பகுதியையும் . திருத்தும் உரிமையைப் பாராளுமன்றத்திற்கு அளித்தது.

(Presiding Officers conference souvenir, page. 1 l)

தன் உரிமையை நிலை நிறுத்திக்கொள்ள பாதிக்கப் பட்டவர் உச்ச நீதி மன்றம் செல்லலாம் என்ற உரிமை. வழங்கும் அரசியல் சடடம் 32-வது பிரிவு உட்பட உள்ள அடிப்படை உரிமை பற்றிய பிரிவுகளையும் திருத்தும் உரிமையைப் பாராளுமன்றம் 24-வது திருத்தம் மூலம்