பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

36

பெற்றுக் கொண்டிருக்கும்போது ஒர் உறுப்பினர்க்கு, சட்டப் பேரவைக் கூட்டத்திற்கான அழைப்பினை அனுப் பாமலே சட்டப் பேரவை கூட்டப்படுமாயின், அவ்வாறு கூட்டப்பட்ட சட்டப் பேரவைக் கூட்டம் செல்லாது என நீதிமன்றம் செல்லமுடியுமா? செல்வதற்கு அரசியல் சட்டத்தில் வகையிருக்கிறதா என்பதற்கான விளக்கம் அடுத்த கட்டுரையில் தரப்படும்.

பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், அவை நடவடிக்கையில் கூறிய சொற்கள் செயல்பாடுகள் குறித்து எந்த நீதி மன்றத்திற்கும் பதில் சொல்லத் தேவை இல்லை, என, முறையே 105-மற்றும் 194 அரசியல் சட்ட பிரிவுகள் பாராளுமன்ற சட்டமன்ற, உறுப்பினர்களுக்கும் அவற்றின் அதிகாரிகளுக்கும் பாது காப்பும் பாரளுமன்ற சட்ட மன்ற நடைமுறைகளில் நிகழும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க எந்த நீதிமன் றத்திற்கும் அதிகாரம் இல்லை என 122 மற்றும் 212 அரசியல் சட்டப்பிரிவுகள் நீதி மன்றங்களுக்குத்தடையும் விதித்திருக்கும் நிலையில் ஒரு சட்டமன்ற உறுப்பினர்க் குச் சட்டமன்றக் கூட்ட அழைப்பாணை அனுப்பாமல் கூட்டப்படும் சட்டமன்றக் கூட்டம் செல்லாது என்ற காரணத்தை முன்வைத்து, நீதிமன்றம் செல்லும் உரிமை அந்த உறுப்பினர்க்கு உண்டா? அவர் வழக்கை ஏற்று விசாரிக்கும் உரிமை நீதி மன்றத்திற்கு உண்டா என்ற கேள்வி, நியாயமான கேள்வியே.

இந்தக் கேள்விக்கு விடை காண, நாடாளுமன்ற சட்ட மன்றங்களுக்கு அந்த உரிமையையும், நீதிமன்றங் களுக்கு அந்தத் தடையையும் விதிக்கும் சட்டப்பிரிவுகளில் ஆளப்பட்டிருக்கும் சில சொற்றொடர்கள், அச்சொற். றொடர்களுக்கான பொருள் விளக்கங்களைக் காண்பதும் ஒர் உறுப்பினர்க்குக் கூட்டத்திற்கான அழைப்பாணை.