பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

தமிழக முதல்வராக 1938ஆம் ஆண்டில் மூதறிஞர் ராஜாஜி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த போது, தமிழ்நாட்டு மாணவர்கள் இந்தியைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் எனச் சட்டம் கொண்டுவந்த அந்தநாள் தொடங்கி, கழகம் மேற்கொண்டு வந்த, வரும், இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் ஒரு கட்டமாக 5-12-86 அன்று, "தேவநாகரி வடிவில் அமைந்த இந்திதான்், இந்தியாவின் ஆட்சிமொழி" என்ற தொடர் அடங்கிய, இந்திய அரசியல் சட்டம் 343|1 பிரிவு நகலைத் தீயிட்டுக் கொளுத்தியதற்காகத் தமிழகத்தில் பல்லாயிரம் கழகத் தோழர்கள், பல்வேறு மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டார்கள்.

அவ்வாறு அடைக்கப்பட்டவர்களுள், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டவர்களுள், நானும் ஒருவன்; அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர், திரு. V. K. இராஜூ" அவர்களும் ஒருவர். நாங்கள் சிறையில், இருக்கும்போது 22-12-86 இல் நடைபெற்ற சட்டமன்ற நிகழ்ச்சியில், தேசிய அவமதிப்புத் திருத்தச் சட்டப் பிரிவின் கீழ் பேராசிரியர் உள்ளிட்ட பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி இறக்கம் செய்யப்பட்டனர், அவ்வாறு பதவி இறக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற