பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6



இந்த 3 பேர் செயல் சபாநாயகர் தீர்ப்புக்கும் 22-12-86-க்கும் இடையில் நடைபெற்றதாகும்.

சட்ட மன்றம் தொடர்பான தீர்ப்பு வழங்கும் அதிகாரம் சபாநாயகருக்கு சட்டசபை நடந்து கொண்டிருக்கும் நாட்களில் மட்டுமே அல்லாது அது நடைபெறாத நாட்களிலும் உண்டு.

ஆகவே பேராசிரியர் உள்ளிட்ட 7 உறுப்பினர் பதவியை பறித்து உத்தரவிட்டது போல, திரு. ஆறுமுகம் உள்ளிட்ட இந்த 3 பேர் பதவிகளையும் பறித்து உத்தரவு பிறப்பித்திருக்கலாம். ஆனால் அது செய்யப்படவில்லை.

அதற்கு மாறாக 22-12-86 அன்று சட்டசபையில் அவசர கூட்டத்தை கூட்டி பேராசிரியர் உள்ளிட்ட அந்த 7 பேரோடு திரு. ஆறுமுகம், அரக்கோணம் ராஜா உள்ளிட்ட 3 பேரையும் சேர்த்து 10 பேர்களின் பதவி பறிக்கப்பட்டது. அது அந்த 7 பேர் பதவியைப் பறித்த சபாநாயகர் உத்தரவு போல் அல்லாமல் சட்டமன்ற தீர்மானம் மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்தான்் ஒரு சிக்கல். சபாநாயகர் உத்தரவுப்படி பேராசிரியர் உள்ளிட்ட அந்த 7 பேர் 22-12-86 அன்று சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்து விட்டதாகக் கொள்ளலாம். ஆனால் திரு. ஆறுமுகம், திரு. ஆபிரகாம், திரு. வி.கே. ராஜூ இவர்களைப் பற்றி சபாநாயகர் பதவி இழப்பு தீர்ப்பு வழங்காமையால் அவர்கள் 22-12-86 வரை சட்டமன்ற உறுப்பினர்கள் தான். 22-12-86

சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளும் முழு உரிமை பெற்றவர்கள். ஆனால் அவர்களுக்கு அந்த வாய்ப்பு அளிக்கவில்லை. அவர்களுக்கு அந்த வாய்ப்பு கட்டாயமாக அளிக்கப்பட்டு இருக்க வேண்டும்.