பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7



சட்டசபை கூட்டம், அதற்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்புவது குறித்து அரசியல் அமைப்பு சட்டம் 208(1)பிரிவின்படி இயற்றப்பட்ட தமிழ்நாடுசட்ட மன்றப் பேரவை விதிகள் என்ன கூறுகின்றன.

அதிகாரம்: 2: விதி 3 பேரவை கூட்டுதல் பற்றிக் கூறுகிறது. அது வருமாறு:

(அ) பேரவை ஆளுநர் கூட்டும்போதெல்லாம் பேரவைக் கூட்டத்துக்கான நாள். நேரம், இடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றினை அரசிதழில் லெளியிட வேண்டும்.

(ஆ) செயலாளர் ஒவ்வொரு உறுப்பினர்க்கும் பேரவைக் கூட்டத்திற்கென குறிக்கப்பெற்ற நாள்,நேரம், இடம் ஆகியவற்றை அறிவிக்க வேண்டும்.

மேலும் பேரவைக் கூட்டம் குறுகிய முன்னறிவிப்புடனோ அல்லது அவசரமாகவோ கூட்டப்பெறின், ஒவ்வொரு உறுப்பினர்க்கும் தனித்தனியே அழைப்பானைகள் அனுப்பப் பெற வேண்டுவதில்லை. ஆனால் கூடும் நாள், இடம் ஆகியவற்றை அரசிதழிலும் செய்தித் தாள்களிலும் வெளியிட வேண்டும். மேலும் உறுப்பினர்களுக்கு தந்தி மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ தெரிவிப்பதோடு வானொலி வாயிலாகவும் தெரிவிக்க வேண்டும்.

இதில் குறுகிய முன்னறிவிப்பு கூட்டம் அல்லது அவசரக் கூட்டத்துக்கான அழைப்பு அரசிதழிலும் செய்தி தாள்களிலும் வெளியிட வேண்டும் என கூறியதோடு நில்லாமல் உறுப்பினர்களுக்குத் தந்தி மூலமாகவோ