பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8



அல்லது வேறு வகையிலோ தெரிவிக்க வேண்டும் "Shal be informed’ என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. .

திரு மதுராந்தகம் ஆறுமுகம், ஆபிரகாம், வி.சேது ராஜூ ஆகியோர் அந்த தேதிக்கு முன்பிருந்தே சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். சிறை கைதிகளுக்கு செய்தி தாள்கள் வழங்கப்படுவது இல்லை. வானொலி வசதியும் இல்லை.

ஒரு உறுப்பினர் ஒரு குற்றச்சாட்டின் பேரில் அல்லது ஒரு குற்றம் செய்ததற்காக கைது செய்யப்பெற்றாலும் அல்லது இந்தியாவின் எந்த பகுதியிலும் உள்ள ஒரு நீதி மன்றத்தினால் சிறைதண்டனை விதிக்கப் பெற்றாலும் அல்லது மத்திய அல்லது மாநில அரசின் நிர்வாக ஆணைப்படி காவலில் வைக்கப் பெற்றாலும் தண்டிக்கும் நீதிபதி, குற்ற இயல் நீதிபதி (மாஜிஸ்திரேட்) அல்லது நிர்வாக அதிகாரி அது பற்றிய செய்தியை பேரவைத் தலைவருக்கு உடனே தெரிவிக்க வேண்டும். அதில் முறையே கைது செய்ததற்கு அல்லது காவலில் வைத்திருப்பதற்கு அல்லது தண்டித்ததற்கு காரணங்களையும் ருறிப்பிட்டிருத்தல் வேண்டும்.

மேலும் அவ்வுறுப்பினர் எவ்விடத்தில் காவலில் வைக்கப் பெற்று உள்ளார் என்கிற விவரத்தையும் பேரவை தலைவரால் வரையறுக்கப் பெற்றுள்ள பொருத்தமான படிவங்களில் (இணைப்பு "அ மற்றும் ஆ) தெரிவிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு சட்ட மன்ற பேரவை விதி 34-இன்படி அந்த 3 பேரில் திரு. ஆறுமுகம் அவர்களும், திரு. ஆபிரகாம் அவர்களும், சென்னை மத்திய சிறையிலும், திரு வி.கே. ராஜா வேலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்படும் செய்தி அன்றன்றே சபா