பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

கணவனைத் தெரிந்துக்கொள்ள மனைவியின் முகத்தைப் பாருங்கள்.

-ஸ்பெயின்

கணவன் விதிக்கும் தளைகளால் தழும்பு உண்டாகாது.

-ரஷ்யா

அன்பில்லாத கணவன் பொறாமையுள்ள கணவனைவிட மேலானவன்.

-இதாலி

தன் குடும்பத்திற்கு நேரும் அவமானத்தைக் கடைசியாகத் தெரிந்து கொள்பவன் கணவன்.

-லத்தீன்

மனைவி

இனிப்புக்குத் தேன், அன்புக்கு மனைவி.

-இந்தியா

இல்லாள் இல்லாத வீட்டில் பேய்கள் குடியிருக்கும்.

-( , , )

விவாகமான பெண்கள் அனைவரும் மனைவியர் ஆகமாட்டார்

-ஜப்பான்

தீய மனைவி அறுபது வருடமாய்த் தீய்ந்து போகும் பயிருக்குச் சமானம்.

-( , , )

இளம் மனைவி தன் வீட்டில் நிழலாகவும், எதிரொலியாகவுமே இருக்க வேண்டும்.

-( , , )

மனைவியின் மூன்று அங்குல நீளமுள்ள நாக்கு ஆறு அடி உயரமுள்ள மனிதனைக் கொல்ல முடியும்.

-( , , )

மனைவியரும் பாய்களும் வந்த புதிதில் சிறப்பா யிருப்பவை.

-( , , )

உன்னிடம் ஏழு பிள்ளைகள் பெற்றிருந்தாலும், அந்தப் பெண்ணை நம்ப வேண்டாம்.

-( , , )

உன் தாயின் கண்கள் அவளைக் கவனிக்கும்வரை நீ ஒரு பெணணை நம்பலாம்.

-( , , )

சேவலுக்கு வாழ்க்கைப் பட்டால், அதன் பின்னேதான் செல்ல வேண்டும்.

-சீனா

ஒற்றைத் திறவுகோல் கிலுகிலுக்காது.

-( , , )

ஒரே மனைவியிருந்தால், வீட்டில் சண்டைஇராது.

-( , , )