பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

தாடி ஒரு மனிதனுக்குக் கௌரவம்; மனைவி அவன் கருவி.

-எஸ்டோனியா

குருட்டுக் கோழிக்கும் ஒரு தானியம் கிடைக்கின்றது, குடிகாரனுக்கும் ஒரு மனைவி கிடைக்கிறாள். -( ,, )

குதிரையையும் மனைவியையும் இலகானில்லாமல் உபயோகிக்க வேண்டாம். -( ,, )

உலகத்திற்கெல்லாம் தெரிய வேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் சொன்னால் போதும். -( ,, )

கன்னியா யிருக்கும் பொழுது மாடப்புறாவா யிருந்தவள் மனைவியான பின் தண்டாயுதமாகி விட்டாள். -( ,, )

மனிதனுக்கு மனைவி வாய்த்தே தீருவாள். -( ,, )

கப்பல், குதிரை, அல்லது மனைவியை மற்றவரை நம்பி ஒப்படைக்காதே. -( ,, )

மனிதனின் பூட்டு மனைவி. -( ,, )

மனைவி ஒருமுழம் தள்ளி யிருந்தாலும், அந்த அளவுக்கு மனிதன் சுதந்திரமுள்ளவன். -( ,, )

மனிதன் வாழ்க்கையை மனைவியே பாழாக்குகிறாள். -( ,, )

எல்லாப் பெண்களும் நல்லவர்களா யிருக்கும் பொழுது, கெட்ட மனைவியர் எங்கிருந்து வருகின்றனர்? -( ,, )

அழகான பெண் கண்ணுக்குத்தான் சுவர்க்கம், ஆனால் பணப்பைக்குச் சனியன், ஆன்மாவுக்கு நரகம். -( ,, )

ஏழை மனைவிக்கு எத்தனையோ இன்னல்கள் : அழுகின்ற குழந்தைகள், ஈர விறகு, ஓட்டைப் பானை, கோபமுள்ள கணவன். -ஃபின்லந்து

என் கணவன் என்னை அடிப்பதில்லை, காரணம் அவனுக்கு என்மீது அன்பில்லை. - கிரீஸ்

மனைவியர் நல்லவரா யிருந்தால், கடவுளும் ஒருத்தியை மணந்திருப்பார். -ஜியார்ஜியா

அழகான பெண்ணின் புன்னகை பணப்பையின் கண்ணீராகும். -லத்தீன்

ம-3