பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதியோர்‌ காதல்‌.

323

 

அன்னை என்றழைப்பர்‌ மக்கள்‌
இன்புறும்‌ என்றன்‌ நெஞ்சம்‌
'இன்னிழை பூண்டி ருப்பாள்‌.
அத்தான்‌என்‌ றழைப்பாள்‌ என்னை
நன்மொழி ஒன்று சொல்வாள்‌.
நான்‌இசை யாழே கேட்பேன்‌!
அன்னவை அந்நாள்‌। இந்நாள்‌.
அன்னவள்‌ தன்னை நோக்கி,
“அன்னாம்‌: என்‌ ஐழைப்பார்‌ மக்கன்‌
அதுகேட்பேன்‌; இன்பம்‌ கொள்வேன்‌!
அவள்‌ உள்ள உலகம்‌
எனக்கு உவப்பூட்டும்‌.
உயிர்ப்பினை நிலைநி நுத்தும்‌
நன்மழை; உலக நூலைச்‌
செயிர்ப்பற *நீத்தார்‌ செய்வார்‌;
செவ்வே௮வ்‌ வறநூல்‌ தன்னை
முயற்சியிற்‌ காம்பார்‌ மன்னர்‌.
எனக்கென்ன இனி?அம்‌ மூதாட்டி
உயிர்வாழ்வாள்‌ ஆத லாற்றான்‌
உவப்பூட்டும்‌ எனக்‌கவ்‌ வையம்‌!
அவர்‌ வாழ்வது
அவள்மேல்‌ வைத்த காதல்‌.
வாழாது வாழ்ந்து மூத்த.
மணவழ குள்ளம்‌ இஃதே!
ஆழாழிப்‌ புனல்‌அ சைவை,
ஆர்ப்பினை எண்ணி பாது.
வீழுற அதனில்‌ வீழ்த்தும்‌.
இருப்பாணி போல்‌௮ வள்மேல்‌
காழுற மனத்தில்‌ வைத்த
காதலால்‌ வாழு இன்றார்‌!.

 

  • நீத்தார்‌ - துறந்தார்‌