பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நாடிக்கொண் டேயிருக்கும் குடித்தன நலத்தை நெஞ்சம்!

மரச்சாமான்கள் பழுது பார்த்தல்

முடிந்தது தையல் வேலை. முன்உள்ள மரச்சா மான்கள் ஒடிந்தவை, பழுது பார்த்தாள்; உளியினால் சீவிப் பூசிப் படிந்துள்ள அழுக்கு நீக்கிப் பளபளப் பாக்கி வைத்தாள்.

கொல்லூற்று வேலை

இடிந்துள்ள சுவர் எடுத்தாள்; சுண்ணாம்பால் போரை பார்த்தாள்.

மாமன் மாமிக்கு வரவேற்பு

நாத்தியார் வீடு சென்ற நன்மாமன், மாமி வந்தார். பார்த்தனள்;உளம் மகிழ்ந்தாள். பறந்துபோய்த் தெருவில் நின்று வாழ்த்திநல் வரவு கூறி வணக்கத்தைக் கூறி, "என்றன் நாத்தியார், தங்கள் பேரர் நலந்தானா மாமி" என்றாள்.

வண்டிவிட் டிறங்கி வந்த மாமியும், மாமனும், கற் கண்டொத்த மரும கட்குக் கனியத்த பதிலுங் கூறிக் கொண்டுவந் திட்ட பண்டம் குறையாமல் இறக்கச் சொன்னார். வண்டியில் இருந்த வற்றை இறக்கிடு கின்றாள் மங்கை.

மாமி மாமன் வாங்கி வந்தவை

கொஞ்சநாள் முன்வாங் கிட்ட கும்ப கோணத்துக் கூசா, மஞ்சள்,குங் குமம், கண்ணாடி, மைவைத்த தகரப் பெட்டி,