பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

செஞ்சாந்தின் சீசா,சொம்பு, வெற்றிலைச் சீவற் பெட்டி, இஞ்சியின் மூட்டை ஒன்றே, எலுமிச்சைச் சிறிய கோணி,

புதியஓர் தவலை நாலு, பொம்மைகள்,இரும்புப் பெட்டி மிதியடிக் கட்டை,பிள்ளை விளையாட மரச்சா மான்கள்; எதற்கும்ஒன் றுக்கி ரண்டாய் இருக்கட்டும் வீட்டில் என்று குதிரினில் இருக்கும் நெல்லைக் குத்திட மரக்குந் தாணி;

தலையணை, மெத்தைக் கட்டு, சல்லடை, புதுமு றங்கள், எலிப்பொறி, தாழம் பாய்கள்; இப்பக்கம் அகப்ப டாத இலுப்பெண்ணெய், கொடுவாய்க் கத்தி, இட்டலித் தட்டு, குண்டான், கலப்பட மிலாநல் லெண்ணெய்; கைத்தடி,செந்தா ழம்பூ;

திருமணம் வந்தால் வேண்டும் செம்மரத் தினில்முக் காலி; ஒருகாசுக் கொன்று வீதம் கிடைத்த பச்சரிசி மாங்காய்; வரும்மாதம் பொங்கல் மாதம் ஆதலால் விளக்கு மாறு; பரிசாய்ச் சம்பந்தி தந்த பாதாளச் சுரடு, தேங்காய்;

மூலைக்கு வட்டம் போட்டு முடித்தமே லுறையும், மற்றும் மேலுக்கோர் சுருக்குப் பையும் விளங்கிடும் குடை, கறுப்புத் தோலுக்குள் காயிதத்தில் தூங்கும்மூக் குக்கண் ணாடி, சேலொத்த விழியாள் யாவும் கண்டனள் செப்ப லுற்றாள்: