பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தோம்பல்
போனாரே தங்களது
ஊன்உறுதி யில்லை
பொன்வருகை கேட்டவுடன்
உமைக்காணக்-கூனி
வரஇயலா மைக்காக
மன்னிப்புத் தாங்கள்
தரஇயலு மாஎன்று
சாற்றி வருந்தினார்"
என்றுரைத்தால் இல்லத்
தலைவி. இதுகேட்டு,
தலைவிக்கு விருந்தினர்
"நன்றுரைத்தீர் நாங்கள்போய்க்
காணுகின்றோம்”-என்றுரைத்தார்.
அன்பு விருந்தினர்கள்
அங்கு வருவதனைத்
தன்மாமன் மாமியார்பால்
சாற்றியே-பின்னர்
அறையை மிகத்தாய்மை
ஆக்கி, அமர
நிறையதாற் காலி
நெடும்பாய்-உறஅமைத்துச்
"செல்லுக!நீர்" என்றுரைத்தாள்
செல்வி; விகுந்தினர்கள்
பெற்றார் சென்றே
வணக்கமென்று-சொல்லலுற்றார்.
விருந்தினரைக் கண்ட முதியோர்
வந்த விருத்தினர்க்கு
வாழ்த்துரைத்துக் கையூன்றி
தொந்த படியெழுந்தார்
நோய்க்கிழவர்-அந்தோ!
விருந்தினர் முதியோர்க்கு

  • படுத்திருங்கள் ஐயா!

படுத்திருங்கள் அம்மார்
31