பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நல்ல குடும்பம் டாக்டர் ச.மெய்யப்பன் பாவேந்தர் பாரநிதாசன் படைப்புகளில் தனிச் சிறப்புடன் விளங்குவது குடும்ப விளக்கு. இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் குடும்ப விளக்கு ண்பால். பயனால் தனி இடத்தைப் பெற்றுள்ளது. ஒரு நல்ல குடும்பத்தின் நல்லியல்புகள் சொல்லோவியமாக்கப் பெற்றுள்ளன. காதல், குடும்பம், குடும்பப் பொறுப்பு, மனையறம், கல்வி, மகிழ்ச்சி மிக்க பொழுதுபோக்கு, மாண்பு சேர்க்கும் நற்குணங்கள் குடும்ப விளக்கில் உயிரோவியமாகின்றன. கவிஞரின் வாழ்க்கை அனுபவங் கள், மதிப்பீடுகள் நூலுக்கு வலிமை சேர்க்கின்றன. சங்கப் பண்பும், திருக்குறள் உயிர்க் கூறுகளும் குடும்ப விளக்கில் வேரோடியுள்ளன. தமிழ்ப் பண்பாட்டின் மறுமலர்ச்சி இதழாக மலர்ந்துள்ள இந்நூல் தமிழ் வழங்கும் நிலப்பரப்பி லுள்ள இல்லங்கள்தோறும் சுடர் பரப்பி நெறிப்படுத்தும் குடும்ப விளக்கு, எளிமையில் எளிமை, பழகு தமிழ்ச் சொற்கள். புத்தம் புதிய உவமைகள், செழுமைமிகு கற்பனை கள். காப்பியக் கூறுகள் நூலுக்கு வளம் சேர்க்கின்றன. திருமணம், மக்கட்பேறு, விருந்து. முதியோர் காதல் முதலியன தமிழ் மன்பதையின் நாள் வாழ்க்கையின் நல்ல படப்பிடிப்பு. அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு இரண்டும் காலத்தை வெல்லும் கவின்மிகு இலக்கியச் செல்வங்கள். நூற்றாண்டு விழா ஆண்டில் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கிப் பார் முழுதும் பரவச் செய்த தமிழக அரசுக்குத் தமிழக மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.