பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணம்.
செல்வியை அழைத்தாள்; மங்கை
திடுக்கிட்டு வீடு சென்றாள்.
வில்விளின் றம்பு போல
வேடப்பன் கொல்லை நீங்கி
நல்லமிள் ளைபோல் வீட்டு
வாயிலுள் நடக்க லானான்.
மர்சூழல் கண்டாள் 'ஓ ஓ
வேடப்பா வாவா' என்றாள்.
'நலந்தானே அப்பா அம்மா?
நலந்தானே தம்பி தங்கை?
அலம்புக கைகால் வந்தே
அமரப்பா சாப்பி டப்பா
இலைபோட்டா ிற்று வாவா
வேடப்பா' எனப்ப கர்த்தாள்.
'தண்டலுக் காக வந்தேன்
அப்படி யேஇங் கும்மைக்
கண்டுபோ கத்தான் வந்தேன்;
கடைக்குநான் போக வேண்டும்.
உண்டுபோ என்கின் றீர்கள்
'உண்கின்றேன்' எனவே டப்பன்
உண்டனான்; உண்ணக் கண்ட
நகைமுத்தோ உவப்பை உண்டாள்,
"குப்பத்துய் பெருமாள் தாத்தா
குறட்டைவிட் றேங்கி வாரே!
எப்படிச் சென்றார்? நீமிங்
கிருந்தாயே நலைமுத் தாளேர்
அப்படி அவர்சென் றாலும்
நீயன்றோ அழைக்க யேண்டும்
தப்புநீ செய்தாய்' என்று
தாய்மலர்க் குழவி சொன்னாள்.
இவ்வாறு சொல்லும் போதே
கொல்லையி விருந்த தாத்தா
"எவ்விடம் சென்று விட்டேன்
இங்குத்தாள் இருக்கின் றேனே;
செவ்வாழை தனில்இ ரண்டு
சிற்றனணில் நெருங்கக் கண்டேன்.