பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமணம்
பண்முழுதும் வாங்கிவரச் சொன்னார்' கஎன்றான்;
பதைத்திட்டான் மணவழகன் மானம் எண்ணி
மீட்டேதும் தந்தாரோ? உன்னி டத்தில்
செலுத்துவது சரியில்லை அறியேன் உன்னை;
கூட்டத்தின் நடுவினிலே குறுக்கிட் டாயே
கூறுகநீ மாவரச பீடத்தில்" என்றான்; கேட்கின்றோம் கொடுத்தபணம் எரிச்சல் என்ன? கெட்டதினைப் புடையவர்றிர்' கஎள்று கூறி நீட்டினான் தன்நடையைக் கருப்பண் ணன்தான் திருகுத்தான் மணவழகள் இருகண் ணாலும். வந்திட்டான் மாவரசன் எதிரில் நின்று
'வைகீழே என்பணத்தை" என்று சொன்னான்: நொந்திட்டான் மணவழகன் நொடியில் எண்ணி நூற்றுக்கு முக்காலாம் வட்டி போட்டுத் தந்திட்டான்; மாவரசன் பெற்றுக் கொண்டான்; 'தகாதவரின் நட்பாலே மானம் போகும்" இந்தமொழி சொன்னமண வழகன் தன்னை ஏரிமா வரசன்தான். ஏக லானான்.
"மாவரசன் தன்னைநான் பணமா கேட்டேன்
வைத்துவைப்பாய் என்றுரைத்தான் வாங்கி வந்தேன்;
யாவரொடும் பேரிநான் இருக்கும் போதில்
எவனோவந் தெனைக்கேட்டான் பணங்கொ டென்று
நோவஉரைத் திட்டானே தீயன் என்னை
நூறாயிரம் கொடுக்கல் வாங்கல் உள்ளேன்
நாவால்ஓர் வசைகேட்ட தில்லை என்று
தனிவருத்தி மணவழகள் அழதி ருந்தான்.
மணவழகன் வழக்கறிஞ னிடத்திற் சென்றான்
மானக்கே டிதற்கென்ன செய்வ தென்று
தணிவற்றுப் பதறினான்; பொய்வ ழக்குத்
தான்தொடங்க வழக்கறிஞன் சாற்ற லானாள்;
இணங்கமறுத்த தவனாகி நண்பர் பல்லோர்
இடமெல்லாம் இதைச்சொல்லி வருந்த லானான்;
துணைவியிடம் சொல்வதற்கு வீடு வந்தாள்;
தொடர்பாக நடந்தவற்றைச் சொல்லித் தீர்த்தான்.
71