பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
என்னுரை


"குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?" என்று இந்த நூலுக்குப் பெயர் சூட்டியிருக்கிறேன்.

உலகில் வாழ்கிற ஒவ்வொருவருக்கும், தனது உடலானது சீராக இருக்க வேண்டும். நேராக இருக்க வேண்டும். ஜோராக இருக்க வேண்டுமென்ற ஆசை உள்ளத்திலே ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டிருப்பது உண்மைதான்.

சில காரணங்களால் இந்த ஆசை சிதறிப் போவதுண்டு. சிதைந்துபோவது உண்டு. உருமாறிப் போவதும் உண்டு. அதற்கான காரணங்கள் தெரிந்தாலும் அதை மாற்றியமைக்க முடியாத, ஒரு வருத்தமான மயக்க நிலையும் உண்டு.

இப்படிப்பட்ட வருத்தமும், மாற்றமும், மனதைக் கலங்க அடிக்கின்ற மயக்கமும் உங்கள் உள்ளத்திலிருந்து அகற்றி வெளியேற்றுவதற்காகத்தான், இந்த நூலை உங்களிடம் தந்துள்ளேன்.

வாழ்வு வளமாக வேண்டுமென்ற விருப்பம் உங்களைச் சுற்றிச் சுற்றி வந்தாலும், தாழ்வு மனப்பான்மையும் உருவாகி ஒன்று உங்கள் உள்ளத்திலே புகுந்து கொண்டு ஓரங்கட்டி விடுகிறது. அந்தத் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட்டு வெளியேறி, விடுதலை அடைந்து, நீங்கள் வெற்றி காண வேண்டும்.