பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மற்றவர்கள் கண்முன்னே வீர நடைபோட வேண்டும். மற்றவர்கள் இளக்காரபார்வைக்கு எதிரே நீங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும். இந்தத் துணிவினை உங்கள் உள்ளத்திலே தூண்டிவிடும் துணையாக இந்த நூலை உங்களுக்குக் கொடுப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

இதுபோன்ற பல உடலழகுப் பயிற்சி, முறைகளை விளக்கும் நூல்களை எழுதி வழங்கியபொழுது, அவை மக்களுக்கு மகத்தான உதவியினைச் செய்து உதவின என்று அறிந்து இந்த நூலையும், தேவைப்படுகிற உங்கள் திருக்கரங்களில் சமர்ப்பிக்கிறேன்.

நூலைப் படிப்பதால் மட்டும் உடம்பு குறைந்துவிடாது. கொடுத்திருக்கும் பயிற்சிகளாகக் குறைவில்லாமல், நிறைவான நம்பிக்கையுடன் நிதமும் செய்துவர வேண்டும். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாமல், உணவு உண்பதில் கொஞ்சம் பத்தியத்தைக் கடைபிடிக்கவும். தொடர்ந்து செய்து கொண்டே வந்தால், தொளதொள என்ற உடம்பு மாறி, தேகத்தில் புதுப் பொலிவையும், பேரழகையும் ஏற்படுத்தும்.

வாழ்க எல்லா நலமும், வளமும் பெற்று, இந்த நூலைக்கற்று.

லில்லி பவனம், அன்புடன்,

தி. நகர். சென்னை - 17. டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா