பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

49


உணவுகளால் , உடலில் எடை கூடி குண்டாகும். ஆசைப்பட்டு சாப்பிட்டு விட்டு, அதை இந்த சுரப்பிகள் மேல் பழியை போடக் கூடாது. உணவை அதிகரித்தாலே, உடல் எடையும் அதிகரிக்கும். அதுதானே இயல்பான நிலைமை என்பதை மறக்கக் கூடாது.

4. பெண்களும் மாத்திரையும்:

சில பெண்மணிகள், தாங்கள் குண்டாகிப் போனதற்குக் காரணம், தினம் தாங்கள் உட்கொள்ளும் மாத்திரை மருந்துகளால் தான் என்று குறை கூறுகின்றார்கள். ஆனால், இது போன்ற குற்றச்சாட்டை, ஆய்வுகள் சரியென்று ஏற்க வில்லை.

மருந்து மாத்திரைகள், உட்கொள்கிறபோது, சாதாரணமாக, சிறிதளவு எடை கூடுவது என்பது சகஜந்தான். அது மிகவும் சிறிய அளவின் தான் எடை கூடும். ஆனால், மருந்து சாப்பிடுகிற சில பெண்களுக்கு, உடல் எடை குறைந்து போகிறதே, அது ஏனென்று யாரும் பேசுவதில்லை.

மருந்துகள் சாப்பிடுகிறபோது, உடலில் உள்ள நீர்மம் (Fluid) அதாவது நீர்த்தன்மை, சற்று தேகத்தில் தேங்கி விடுவதால், ஒரு 3 கிலோ அளவுக்கு (7 பவுண்டு) எடை கூடி விடுகிறது. என்று கணக்கெடுத்திருக்கின்றனர்.

ஆனால், நீர்மம் வெளியேறாமல் தங்கச் செய்கின்ற வேலையைச் செய்கிற மருந்து மாத்திரைகளை, சாப்பிடாமல் நிறுத்தி விடுகிறபோது, உடல் எடையும் குறைந்து போகிறது என்றும் மருத்துவ வல்லுநர்கள் கண்டறிந்திருக்கின்றார்கள்.