பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

57


கொண்டு வந்து விடுகிறது. ஒருசிலர் உடல் குண்டாகத் தோன்றிய போதும் சற்று சீராகத் தோற்றம் அளிப்பது போல் தெரிய சில முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

தங்கள் எடை குறையாமலேயே தொங்கிக் கொண்டிருக்கின்ற சதையைக் கொஞ்சம் இறுக்கமாக்கி விடுவது. அதற்காக அதிக விலையுள்ள தசைகளை கிளர்ச்சி ஊட்டி முறுக்கு ஏற்றுகிற மின்சார சாதனங்களைக் கவலைப் படாமல் வாங்கிப் பயன்படுத்துகின்றவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அது போன்ற பயிற்சி முறையை அதிக நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால்தான் எதிர்பார்க்கின்ற பயன்களைப் பெற முடியும்.

தேவையான இடத்தில் தேவையற்ற சதையைக் குறைக்க வேண்டுமென்றால் உடற்பயிற்சி செய்வதன் மூலமே நன்மை பெற முடியும் என்ற உண்மையை நாம் மறக்கவே கூடாது. அதுதான் உண்மையான வழி.