பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 173


பகடுபுறந் தருநர் பார மோம்பிக்
குடிபுறந் தருகுவை யாயினின்
அடிபுறந் தருகுவ ரடங்கா தோரே." (புறம் 25)

அதனாலேயே திருக்குறள் விரிவான அரசியல் கோட்பாடுகளை நடைமுறை விதிகளை எடுத்துக் கூறாமல் பொது நெறிகளை மட்டுமே விளக்குவதாகத் தோன்றியது போலும், அரிஸ்டாடில் போன்றவர்கள் மன்னன் அதிகாரத்திற்கு அரண் செய்யும் வகையிலேயே நெறி வகுத்தனர். அர்த்தசாத்திரமும் அந்நெறியதே. இவை மட்டுமல்ல; மக்கள் உரிமைகளைக்கூட இவர்கள் உறுதிப்படுத்தவில்லை. இனப் பிரிவுகளைப் படைத்து அவ்வழியிலேயே வேறுபட்ட உரிமைகளை வழங்கினர். ஏன்? மக்களுக்கு அடிமை வாழ்க்கையே கூட வழங்கினர். வள்ளுவர் அடிமை வகுப்பு என்பதையே ஒப்புக்கொள்ள வில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

"பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்" (972)

என்பது குறள். பிறப்பில் உரிமைகள் அனைவருக்கும் சமம் என்பது வள்ளுவர் கண்ட நெறி. பிறப்பில் சாதிகள் இல்லை; பிறப்பிலேயே பணக்காரன் இல்லை; ஏழை இல்லை என்பதாகும். திருக்குறள் முடியாட்சியை ஏற்றுக்கொண்டது. ஆனாலும் முடியாட்சியின் தடையிலா அதிகாரத்தை வள்ளுவம் ஏற்றுக்கொள்ளவில்லை.

அரசியல் என்பது ஒரு வாழ்வியல் தத்துவம், கொள்கை, கோட்பாடு. வள்ளுவத்தின் அரசியலுக்கு ஆதாரம் அறமேயாம். திருக்குறள் அரசியலை முறையாக விளக்குகிறது. மனிதகுலப் பொருளியல் ஒழுக்க முறைகளை முறைப்படுத்தி, வளம், வறுமையென்ற வேறுபாடுகளை அகற்றிப் பொருளின் காரணமாகத் தோன்றும் ஒழுக்கச் சிதைவுகளை நீக்கி, நிறையான ஒரு சமுதாயத்தைப்