பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 211


தகுதிகளை வரையறுத்துக் கூறுவதை விட ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறுவது வலியுறுத்துவது போல அமைந்துள்ளது. ஒழுக்க நெறிகளின் தோற்றக்களனே சமுதாயம் தானே! பலர்கூடி இசைந்து வாழுதற்குத் துணை செய்யும் நெறிகள் தாமே ஒழுக்க நெறிகள். அங்ஙனமில்லாது சமுதாயத்தின் ஒரு பகுதிகளை ஒதுக்கியும் அகநிலைகளில் நீங்காத உட்பகையையும் அவ்வழிப் புலன்களையும் வழங்கும் ஆசாரம் என்ற பெயரில் வந்த முறைகள் ஒழுக்கமா? ஏன்றைக்கு வள்ளுவத்தின் ஒழுக்க நெறிகளை மறந்து இடையில் வந்த ஆசாரங்களை ஏற்றுக் கொண்டோமோ அன்றைக்கே தமிழினம் தாழ்ந்தது. மற்றவர்களை வருத்தாது, துன்புறுத்தாது, அவர்கள் உவந்துமகிழும் வண்ணம் வாழ்தலே ஒழுக்கமுடைய வாழ்க்கை. அதுவே ஒழுக்கங்களுக்கெல்லாம் தலையாய ஒழுக்கம். கள்ளுண்ணல் போன்ற ஒழுக்கக்கேடுகள் ஒழுக்கமின்மையானதற்கே காரணம் அறிவு மயங்கி மற்றவர்களுக்குத் துன்பம் விளை வித்தலால்தானே! ஆக, சமுதாயத்தில் பலரோடு கூடி இசைந்து வாழ்தல் என்பது தலையாய ஒழுக்கம். மனிதகுலக் கூட்டுச்சமுதாயம் அமையவேண்டும். நாடு, மொழி, இனம், சமயம், சாதி வேறுபாடுகள் அற்ற ஒருவன் தோற்ற வேண்டும். தமிழினத்தின் தனிக் கவிஞனெனப் பாராட்டப்பெறும் புரட்சிகள் பாரதிதாசன்கூட வளர வளர உலகைநோக்கிச் சிந்தனையை விரித்துள்ளான். பாரதிதாசன் தொடக்க காலத்தில் தமிழினத்தின் கவிஞனாக விளங்கியது உண்மை. அவனுடைய வளர்ச்சியில் அவன் பாரதியை விடவும் உலகைநோக்கி நடந்தவன் என்பதை இனவழிப்பட்ட காய்ச்சலின் காரணமாக நாடு அறியவில்லை; உணரவில்லை.

உன் வீடு - உனது பக்கத்து வீட்டின்
இடையில் வைத்த சுவரை இடித்து
விதிகள் இடையில் திரையை விலக்கி