பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 225


செல்வமுடைமையும் அறமன்று. 'பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள' என்று பின்னே வள்ளுவர் பேசுகிறார். அதனால், சிவிகை ஊர்தல்-தாங்குதல் என்ற வாழ்க்கை வேறுபாடுகள் உலகியலாலும் செல்வ வேறுபாட்டாலும் தோன்றுவதே தவிர, அறத்தின்பாற் பட்டதன்று என்பதே திருவள்ளுவரின் தெளிந்த கருத்து.

ஒரோ வழி அறத்தின் காரணமாகவும் சிவிகை ஊர்தலும் உண்டு. சிவிகை தாங்குதலும் உண்டு. அப்பொழுது சிவிகை ஊர்கிறவர்களும் சிவிகை தாங்குகிறவர்களும் ஒத்த உணர்வினராய்...ஒத்த தகுதியுடையவராய் இருப்பர். அங்கு ஒருவருக்கொருவர் பெருமைப்படுத்திக் கொள்ளும் பண்பாட்டின் வழியிலேயே சிவிகை தாங்குதல் நிகழ்கிறது. அங்கு சிவிகை தாங்குதலும் அறமேயாம். இக்காட்சியைத் திருஞான சம்பந்தர் ஊர்ந்த சிவிகையைத் திருநாவுக்கரசர் தாங்கியதிலிருந்து நன்கு உணரலாம்.

"அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தனோ டூர்ந்தா னிடை (37)

மனையறத்தார் கடமை

வாழ்க்கை குறிக்கோள் உடையது. தோழமை கொள்வதும் துணை நிற்பதும் துயர் துடைப்பதும் வாழ்க்கையின் இன்றியமையாத பணிகள். இப்பணிகளற்ற வாழ்க்கை வாழ்க்கையாகாது. மனிதன் ஊன் உண்பதும் காதற் பெண்டுடன் களித்து மகிழ்ந்து மனையில் வாழ்வதும் குறிக்கோள் பாதையில் இனிதே நடைபோடத்தான். இன்று பலர் உண்பதே தொழிலாகக் கொண்டு இருக்கின்றனர்; பெண்ணின்பமே இன்பமெனக் கருதுகின்றனர். இவர்கள் உருவத்தால் மனிதர்கள்; உணர்ச்சியில் விலங்குகள். வனத்திடை வாழ்வதற்குத் தப்பிப்போய் நாட்டில் நடமாடுகின்றனர். வள்ளுவம் வாழ்வாங்கு வாழும் நெறியுணர்த்தும்