பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேண்டும் - அப்பொழுது தான் சொல்லலாம்" என்றும் சொல்லப்பெறுகிறது. தீமையின் அனுபவத்தின் விளைவில் தான் நன்மை அரும்புகிறது. ஆனாலும், அந்த நன்மையைத் தோற்றுவிப்பதற்குக் காரணமாக இருந்த அந்தத் தீய அனுபவத்தில் எப்படி நன்மையைக் காண முடியும்! அதனால் ஆராய்வு செய்தி பற்றியதாகவே இருத்தல் வேண்டும்.

நடுவுநிலைமைக் கொள்கை பண்படாத சமுதாயத்தில் - நட்புலகின் தொடக்கத்தில் இன்பம் இருக்காது. மாறாகத் துன்பம் தரும். நண்பர்களும் பகைவர்களாவர். எனினும், தொடர்ந்து நடுவு நிலைமைக் கொள்கையைக் கடைப்பிடித் தொழுகின் இறுதியில் இன்பம் வந்தெய்தும், தன்னுடைய வாழ்க்கை --- தன்னலம் ஆகியவற்றைவிடக் கொள்கைக்கும் சீலத்திற்குமே உய்வு தந்து ஒழுகுதல் வேண்டும். அங்ஙனம் ஒழுகிய ஒருவன் அக்கொள்கையின் காரணமாகவே இறந்து பட்டாலும் கூட உலகத்து மக்கள் அக்கொள்கைக்கும் சீலத்திற்குமே உயர்வு தந்து ஒழுகுதல் வேண்டும். அங்ஙனம் ஒழுகிய ஒருவன் அக்கொள்கையின் காரணமாகவே இறந்து பட்டாலும்கூட “அக்கொள்கைகள் தங்கி நின்று விளக்கம் பெற வாய்ப்பில்லாது போயிற்றே” என்று உலகத்து மக்கள் இரக்கமுறுதலின் மூலம் புகழ் சேர்ப்பர். நடுவு நிலைமையை “நன்னர் நடுவு" என்று நெய்தற் கலி பாராட்டுகிறது. அதாவது, "நன்மையை உடைய நடுவு நிலைமை" என்கிறது. திருவள்ளுவர்.

"தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும். (114)

என்கிறார். இக்குறட் பாவுக்கு உரை கண்ட பரிமேலழகர் எச்சத்தை தன்மக்கள் மீதேற்றினார். அதோடு இயற்கைக்கு மாறாக--உடற்கூற்றுக்கு முரண்பாடாக மக்கட்பேறு உண்டாதலையும் இல்லாமற் போதலையும் உள்ளடக்கியும்