பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நெல்லினின்றும் பிரிக்கப் பெற்றுக் கழிக்கப் பெறும். அது போலவே, பயனற்ற சொற்களைப் பேசிக் கொண்டு தம்மை . உயர்ந்தார் போல -- நீதிமான்களைப் போலக் கருதிக் கொண்டும் -- காட்டிக் கொண்டும் சிலர் வாழ்கின்றார்கள். ஏன்? பலர் வாழ்கின்றார்கள். எனினும் தவறாகாது. ஆனாலும் காலம் வருகின்ற போழ்து, பயனில் சொல் பாராட்டித் திரிந்தவர்களை நாடு ஒதுக்கும்; ஒறுக்கும்.

ஒரு மனிதனுடைய உள்ளுணர்ச்சி எத்தகையது என்பதை அவனுடைய சொற்கள் காட்டும். நிலத்தின் இயல்பைத் தண்ணீர் காட்டுவது இயற்கை. அதுபோலவே, உணர்ச்சி, எண்ணம் ஆகியவற்றின் இயல்புகளைச் சொற்களே காட்டும். “பயனற்ற சொற்களை வழங்குகின்றவன் அறிவுடையவனாகவோ, இனிய பண்புடையவனாகவோ இருக்க முடியாது. நீதி நெறி வழிப்பட்ட வனாகவும் இருக்க முடியாது" என்று திருவள்ளுவர் கருதுகிறார். பயனில பாரித்து உரைக்கும் உரை நயனிலன் என்பது சொல்லும்--என்று திருக்குறளைக் கொண்டு கூட்டிப் பொருள் சொல்லும் போழ்து. அமுதினும் இனிதாக இருக்கிறது, கருத்துச் சுவை. சொல்லும் சொற்களோ பயனற்றவை. அதையும் சுருங்கச் சொல்லுகிறார்களா? உண்ட உணவு செரித்து அடுத்தவேளை பசி தோன்ற வேண்டுமே! அதுவரையில் பேச வேண்டும்; பேசித் தீர்க்க வேண்டும் என்ற உணர்ச்சியோடு தெருவோரத்தில்திண்ணைகளில் உட்கார்ந்து வம்பு அளப்பவர்களுக்குக் காலத்தின் அருமை தெரியாது! ஆதலால், பயனற்ற சொற்களாக இருந்தும்கூட, விரித்துரைத்து மகிழும் இயல்பு இவரிடத்திலும் இருக்கிறது. இந்த அளவிலேயே திருவள்ளுவர் முடிவு சுட்டச் சொல்கின்றார். என்ன முடிவு? பயனற்ற சொற்களைப் பேசித் திரிவோரை அறிவில்லாதவர் என்று கருதி எட்டடி தூரத்தே நிறுத்து; அல்லது நெருங்காதே. நெருங்கினாலும் காது கொடுத்து விடாதே! நீதியற்றவன்