பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 325


அவ்வளவாக வருந்த வேண்டிய அவசியமில்லை. அஃது அவனுக்கொரு கொடையே; இதனைத் திருவள்ளுவர்.

"உறங்கு வதுபோலும் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு"

(339)

என்று கூறுகின்றார். அன்றாட வாழ்க்கையில் உறக்கமும் விழிப்பும் எங்ங்னம் இயல்பாக நடைபெறுகிறதோ அது போன்ற இயல்பானதொன்று மரணமென்பது வள்ளுவர் கருத்து. இதனையே அப்பரடிகளும்,

"துறக்கப் படாத உடலைத் துறந்துவெம் துரதுவரோடு
இறப்பன் இறந்தால் இருவிசும் பேறுவன் ஏறிவந்து
பிறப்பன் பிறந்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
மறப்பன் கொலோ என்றென் உள்ளங் கிடந்து மருகிடுமே.”

என்று பாடுகிறார்.

இதுபோலவே மிகப் பெரிய அளவில் தோன்றிய உலகம், திரும்பத் திரும்பத் தோன்றுதலுக்கு 'இளைப் பொழித்தல்' என்று மாதவச் சிவஞானமுனிவர் கூறுவர்.

ஆதலால், மரணம் பற்றிக் கவலைப்படுவதை விட வாழ்க்கையைப் பயனுடையதாக்கிக் கொள்ள வேண்டும் என்று கவலைப்பட்டு முயலுதலே முறையான வாழ்க்கை. ஆதலால், எல்லோருடைய மரணம் பற்றியும் அழுதல் நெறியன்று. முறையாக வாழத் தெரியாதவன் மரணத்திற்கு ஆட்படுதல் மீண்டும் புதிய வாய்ப்பு கிடைத்தற்கு ஏதுவாகும். ஆனால், இந்தப் பொதுவிதி நல்லோருக்கல்ல. அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்களாதலால் மரணவாயிலில் அழமாட்டார்கள்; மகிழ்வார்கள்.

ஆனால், இந்த நிலத்தியலின் வாழ்க்கைக்கு வித்தென விளங்கும் நல்லவரை இழப்பது குறித்து அழுவார்கள். நாம் சிரிக்க மற்றவர்கள் அழ, வாழ்க்கை முடியுமானால் அது வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கை! நாம் அழவும் மற்றவர்கள்