பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 349



நாட்டுக்கு இலக்கணம் படைக்கின்றார் திருவள்ளுவர். நாடு என்பது ஓர் ஒப்பற்ற அமைப்பு. அந்நாட்டில் வாழும் மக்களுக்கு வயிற்றுச் சோற்றுக்கு வறுமையிருத்தல் கூடாது. ஆதலால் தள்ளா வினையுள் நாட்டுக்கு முதல் தேவை. நிலவளம் இன்றியமையாதது. நிலத்திற்கு இயல்பிலேயே ஒன்றைப் பதின் மடங்காகப் பெருக்கித் தரும் வளம் உண்டு. ஆயினும் பேணுவாரில்லையேல் அந்த வளம் வற்றிச் சுருங்கும். நாளுக்கு நாள் நிலத்திற்கு எரு முதலியன இட்டு வளம்குன்றாத நிலையில் பேணினால், இளமை குன்றாது. எழில் பூத்துக் குலுங்கிப் பயன் பல நல்கும். நிலத்திற்கு இளமை முறுக்கும் உண்டு. முதுமைத் தன்மையும் உண்டு. ஆனால் நிலத்தின் இளமையும் முதுமையும் பருவத்தால் வருவதன்று. பேணுதலால் இளமையும், பேணாமையினால் முதுமையும் வருகின்றன. சில நிலங்கள் தம்மைப் பேணு வாரின்மை காரணமாக - கொள்ளுதலின்றிக் கொடுப்பதறியா மாக்களிடம் சிக்கியதன் காரணமாக வலி விழந்து - பொலிவிழந்து காட்சிதரும். ஆங்கு மரமும் புல்லாகக் காட்சியளிக்கும். நில்த்தின் வற்றல் தன்மையை - முதுமையை, ஆங்குத் தோன்றும் புல்லும் காட்டும். பசுமை யற்று வெளிறிக் காட்சியளிக்கும்.

இத்தகு நிலத்திற்குத் தள்ளாமை வந்து விட்டது என்றும் கூறலாம். நிலம் மாறா இளமையிலிருக்க வேண்டும். மனிதனின் செய்யும் முறைகளினால், செப்பமாக்கப் பெறு தலின் "செய்” என்ற பெயராலேயே நிலம் வழங்கப் பெறுகிறது. எண்களில் கூட்டல் - கழித்தல், பெருக்கல், வகுத்தலிற் பிழை வராதது போல, நன்முறையில், பேணப் பெற்ற நிலத்தில் எதிர்பார்ப்பதும் பிழையாது. நிலம் பிழைப்பின் மனிதனின் பிழையே காரணமாகும்.

சில நிலம், மனிதனை எதிர்பார்க்காமலேயே வளமாக இருக்கும். பெரும்பாலும் குறிஞ்சி நிலத்திற்கு இந்த இயல்பு உண்டு. "பல்வளம் கெழீஇய பாரியின் பறம்புமலை உழவர்