பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

73






பிப்ரவரி 26


பலருடன் கூடி வாழும் பாங்கினை அருள்க!

இறைவா! நான் ஒரு பாபமும் செய்யவில்லையே, எனக்கு ஏன் இந்தத் தண்டனை? பலருடன் கூடிவாழ, மனிதனாய்ப் படைத்தாய். ஆனால், கூடிவாழ முடியவில்லையே. என்னைப்பற்றி யாரும் கவலைப்பட மறுக்கிறார்களே! மாறாக என்னிடம் நல்லெண்ணம் இல்லையென்று தத்தம் மனதிலே நினைப்பதை எல்லாம் கூறுகிறார்களே. என்ன செய்யச் சொல்கிறாய்?

இறைவா, இதுவா உன் பதில். உன் திருவுள்ளம் அதுவானால் சரி. பலருடன் கூடி வாழ்வதே அறம்! இன்பம்-துன்பம், புகழ்-பழி எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டால்தான் வாழ்க்கை பண்பாடுறுமா? அப்படியானால் சரி. உன் ஆணையை என் நெஞ்சிற்கு எடுத்துக் கூறி சமாதானப்படுத்துகிறேன். வாழி, நின் கருணை!