பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொடியா? கொம்பா?

279


கணித எண்களை-இலக்கணக்குறிப்புகளைத் திரும்பத் திரும்பப் படித்து மூளையில் ஏற்றிக்கொள்ளும் படிப்பல்ல கல்வி. கல்வி ஆழமானது, அகலமானது. கல்வி வாழ்க்கைக்குரியது. வையத்துள் வாழ்வாங்கு வாழும் வகையைக் கற்றுத் தருவது-அனுபவத்தைத் தருவது. சமுதாயத்தில் இருந்து பெறும் அனுபவ அறிவுதான் நிலைத்தது, உண்மையானது.

குறை எங்கே?

“மனிதன் அறிவைப் புத்தகங்களிலிருந்து பெறுவதை விட சமுதாயத்திலிருந்தே மிகுதியாகப் பெறுகிறான்” என்ற சிந்தனைத் தொடர் நினைவில் கொள்ளத்தக்கது.

இன்று ஏட்டில் உள்ளனவெல்லாம் அனுபவத்துக்கு வந்துவிட்டனவா? பொய் சொல்லக்கூடாது-திருடக்கூடாது என்பன போன்ற தத்துவங்கள் அரசியல் சமயம் இரண்டுக்கும் பொதுவானவை. இரண்டும் சேர்ந்தும் பொய்யாமையையும் திருடாமையையும் காப்பாற்ற முடியாமைக்குக் காரணம் என்ன? மனிதனிடத்தில்- அவனுடைய வாழ்வில் எங்கோ ஒருகுறை இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா?

காயமே இதுபொய்யடா; காற்றடைத்த பையடா

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வப்
போக்கும் அதுவிளிந் தற்று”

என்பன போன்ற பொன்மொழிகளை ஏடுகளில் படிக்கிறோம். பலர் சொல்லக் கேட்கிறோம். ஆனால் அந்த மொழிகள் நடைமுறையில்-வாழ்க்கையின் அனுபவத்தில் இல்லை.

இன்றையச் சமுதாயம் அன்றாட வாழ்வில், நடை முறை ஒழுங்கை வைத்துக் கொள்ளாமைக்குக் காரணம்