பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

324

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒரு மாணவனைப் பார்த்து, இருபது விழுக்காடு வாங்கியிருக்கிற மாணவன் பொறாமைபட்டால், இருபது மதிப்பெண்ணை எண்பது மதிப்பெண்ணாக ஆக்க முயற்சிக்க மாட்டான். அழுக்காறு உடையவனாக இருந்தால் அதற்காக அவன் என்ன செய்கிறான் என்றால், எண்பது விழுக்காடு வாங்கினவனுடைய தகுதிக் குறைவை என்னவென்று கண்டு பிடித்துச் சொல்லலாம் என்று ஆசைப்படுவான். எனக்குத் தெரியாதா? அவன் எண்பது விழுக்காடு வாங்கியது எப்படி என்று? அந்த ஆசிரியர் வீட்டு வாயிற்படியிலேயே பணத்தை வைத்துக் கொண்டு காத்துக்கிடந்தான். நான் அப்படியில்லை என்று அவன் மற்றவர்களுடைய தகுதிக்குக் குறை கற்பிக்க முயற்சிப்பானே யன்றி, அவன் தகுதியுடையவனாக முயற்சிக்கமாட்டான். எனவே எந்தக் கோணத்திலும், எந்த வகையிலும், அழுக்காறு தீதுதான்.

அழுக்காறு உடையான்கண் ஆக்கம் இல்லை

என்பார் திருவள்ளுவர். எனவே அழுக்காற்றின் வழியில் இல்லாமல், நாம் மற்றவர்கள் மகிழ்வதற்காகவே மகிழ்வது, மற்றவர்கள் வாழ்வதற்காகவே நாம் வாழ்வது, என்ற உயர்ந்த பண்பாட்டை நம்முடைய ஆன்மீக உலகம், சமய உலகம் சாதித்தாக வேண்டும். இருபதாம் நூற்றாண்டு, எந்த நூற்றாண்டையும் விட நம்முடைய ஆன்மீக உலகத்திற்கு, சமய உலகத்திற்கு ஒரு பெரிய அறை கூவல். பழைய காலத்திலாவது சில பொருள்களை மட்டும் அழிக்கின்ற குண்டுகளைக் கண்டு பிடித்தான். இப்பொழுது விஞ்ஞானத்தினுடைய உச்சிக் கொம்புக்குப் போய் விட்டார்கள்.

>நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்

என்பதைப்போல, இப்பொழுது அண்மையில் கண்டுபிடித்திருக்கிற குண்டு, கட்டடங்களை அழிக்காது; தோட்டங்